Our ACHIEVEMENTS.

1971 ம் ஆண்டு லாரிகளுக்கு நியாயமான வாடகை கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மோகனூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் டெண்டர் பெறப்பட்டது.

24-12-1971ல் யுத்த நிதிக்காக தமிழக அரசு வெளியிட்டசிறப்பு லாட்டரி சீட்டு லாரி உரிமையாளர்களின் சார்பாக ரூ.20,000/- க்கு வாங்கப்பட்டது.

05-11-1973 அன்று பரமத்தி சாலையில் இன்று பெட்ரோல் பங்க் அமைந்துள்ள ஒரு ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது.

1974ம் ஆண்டு டீசல் தட்டுப்பாடு ஏற்பட்ட சமயம் சங்கத்தின் மூலம் அனைத்து லாரிகளுக்கும் டீசல் சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

1975ம் ஆண்டு தமிழ்நாட்டில் வறட்சி ஏற்பட்டபோது சங்கத்தின் மூலம் ரூ.28,100/- தமிழக முதல்வர் வறட்சி நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது.

1976ம் ஆண்டு தஞ்சாவூர் சிவில் சப்ளைஸ் கார்ப்ரேஷனில் நெல் டெண்டர் பெறப்பட்டு லாரி உரிமையாளர்களுக்கு நியாயமான வாடகை பெற்று தரப்பட்டது.

1977ம் ஆண்டு தமிழகத்தின் இயற்கையின் சீற்றத்தால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டது.

1978ம் ஆண்டு லாரி உரிமையாளர்களுக்கு டீசல் தரமானதாகவும், அளவு சரியாகவும் கிடைக்க வேண்டும் என்று IBP COMPANY-ன் பெட்ரோல் பங்க் தலைவர் திரு.ப.செங்கோடன் அவர்கள் தலைமையில் கட்டிடம் கட்டும் பணி ஆரம்பிக்கப்பட்டு 21.05.1978 அன்று பெட்ரோல் பங்க் துவக்கப்பட்டது. நாள் ஒன்றுக்கு டீசல் 55,000லிட்டரும் பெட்ரோல் 4000லிட்டரும் விற்பனை செய்யப்பட்டது. இன்று டீசலுக்கென 10பம்புகளும் பெட்ரோலுக்கென 8பம்புகளும் உள்ளன.

1981ம் ஆண்டு டிரெய்லர் வாகனங்களுக்கு என நமது சங்கத்தின் முயற்சியால் நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம்- டிரெய்லர் பிரிவு உருவாக்கப்பட்டது.

1981ம் ஆண்டு அரசாங்கம் நிர்ணயித்த எடை மற்றும் உயரம் மட்டுமே லோடு ஏற்ற வேண்டும் என்றும் அதிக பாரம் ஏற்ற கூடாது என்ற கண்காணிப்புக் குழு ஏற்படுத்தி அனைத்து வாகனங்களையும் நிறுத்தி பரிசோதித்து அவர்களுக்கு அறிவுரைக் கூறி அதிக பாரம் ஏற்றுவது தடுக்கப்பட்டது.

12-11-1983ம் தேதி சங்கத் தலைவர் திரு.ப.செங்கோடன் அவர்கள் தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

1985ம் ஆண்டு நாமக்கல் நகரில் கால்நடை மருத்துவக்கல்லூரி அமைத்திடல் வேண்டி நமது சங்கத்தின் சார்பாக ரூ.50,000/- நன்கொடை வழங்கப்பட்டது.

1985ம் ஆண்டு அசோக் லேலண்ட் டர்போ பொருத்திய டாரஸ் வண்டியை வாங்கிய உரிமையாளர்கள் மிகுந்த நஷ்டம் அடைந்து வந்தனர். நமது சங்கத்தின் முயற்சியால் அசோக் லேலண்ட், டி.வி.எஸ் நிறுவனங்கள் இலவசமாக பழுது பார்த்தும், புதிய வாகனத்திற்கு சமமாக உதிரி பாகங்கள் மாற்றித் தந்தனர். மேலும் இரண்டு வருடத்திற்கு அந்த வாகனங்கள் உத்திரவாதம் பெற்றுத் தரப்பட்டது.

1987ம் ஆண்டு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்-தமிழ்நாடு என்ற அமைப்பு 16 உறுப்பு சங்கங்களுடன் 25-06-1987-ம் தேதி ஆரம்பிக்கப்பட்டு இன்றைய தினம் 109 உறுப்பு சங்கங்களுடன் நாமக்கல்லை தலைநகராக கொண்டு இயங்கி வருகின்றது.

துவங்கப்பட்ட நாள் முதல் 18-10-2008 வரை நமது சங்கத் தலைவர் திரு.ப.செங்கோடன் அவர்கள் ஜனநாயக முறைப்படி தலைமயேற்று பல்வேறு சாதனைகளுடன் செயல்பட்டு வந்தார் என்பது நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கத்திற்கு பெருமைத் தரக் கூடிய விஷயமாகும்.

1987ம் ஆண்டு தீப்பெட்டி லோடு ஓட்டும் வாகனங்களில் அரசாங்கம் நிர்ணயித்த எடையையும், உயரமும் வைத்து எவ்வித கூலியும் இல்லாமல் நியாயமான வாடகை பெற்று தரப்பட்டது.

1988ம் ஆண்டிலிருந்து IBP Satellite Depot செயல்படுவதால் ஆயில் தட்டுப்பாடு இன்றி குறைவான விலைக்கே வழங்குவதற்கு ஏதுவாக உள்ளது.

1989ம் ஆண்டு எல்.பி.ஜி. வாகனங்களுக்கு என சதர்ன் ரீஜன் பல்க் எல்.பி.ஜி. டிரான்ஸ்போர்ட் ஓனர்ஸ் சங்கம் என்ற அமைப்பினை துவங்க முக்கிய பங்கு ஆற்றியது மட்டுமல்லாமல் ஆரம்ப கால செயலாளராகவும் நமது சங்கத்தின் தலைவர் திரு.ப.செங்கோடன் அவர்கள் பணியாற்றியுள்ளார்.

1989ம் ஆண்டு பரமத்தி சாலையில் உள்ள சங்கத்திற்கு 5,500 சதுர அடி இடம் வாங்கப்பட்டது.

1990ம் ஆண்டு நமது சங்கம் முன்னின்று ஆட்டோ நகர் அசோசியேசன் ஏற்படுத்தப்பட்டது. இச்சங்கத்தின் நமது சங்கத் தலைவர் திரு.ப.செங்கோடன் அவர்கள் கௌவரவ தலைவராக பணியாற்றினார்.

1990ம் ஆண்டு சங்க பங்கில் தொடர்ந்து டீசல் பிடிக்கும் வாகன உரிமையாளர்களுக்கு ஊக்க போனஸ் வழங்கப்பட்டு வருகிறது.

1990ம் ஆண்டு பரமத்தி வேலூர் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம் நமது சங்கத்தின் ஒத்துழைப்போடு உருவாக்கப்பட்டது.

1990ம் ஆண்டு நடைபெற்ற வேலைநிறுத்தத்தின் போது திரு.பழனிசாமி என்ற லாரி உரிமையாளர் தலையில் பலத்த அடிப்பட்டு மூளைநரம்பு பாதிக்கப்பட்டது. அவருக்கு மருத்துவ நிதி வழங்கப்பட்டது.

1990ம் ஆண்டு சம்மேளனம் மூலமாக நடந்த லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் அரசிடமிருந்து பெற்றத் தந்த சலூகைகள்.

1.ஸ்பாட் பைன் நீக்கம் செய்யப்பட்டது.

2.குற்றம் ஒன்று தண்டனை இரண்டு முறையில் தமிழகத்தில் உரிமையாளர்களுக்கு போடப்படும் அபராத தொகையினை ஒரு குற்றத்திற்கு ரூ.50/-மட்டும் நிர்ணயிக்கப்பட்டது. மீண்டும் அரசிடம் முறையிட்டு தமிழகத்தில் விதிக்கப்பட்ட அபராதம் முழுவதுமாக விலக்கப்பட்டது.

3.6 மாதகாலமாக இருந்த வாகனங்களின் எப்.சி. காலத்தை ஒரு வருடமாக நீட்டிக்கப்பட்டது.

4. லாரி உரிமையாளர்களுக்கு விதிக்கப்பட்ட சிறு சேமிப்பு வசூல் ரத்து செய்யப்பட்டது.

சென்னை போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்தில் வழங்கப்பட்ட தேசிய அனுமதியை அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலேயே பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

1991ம் ஆண்டு நாமக்கல்லில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்கப்பட்டது.

1991ம் ஆண்டு சங்கத்தின் மூலம் பெரியப்பட்டி, காவேட்டிப்பட்டி,எர்ணாபுரம் ஆகிய மூன்று ஊர்களில் சத்துணவுக் கூடம் புதுப்பிக்கப்பட்டது.

16-08-1991ம் தேதி முதல் சங்க வ்ளாகத்தில் ப்ரோடா வங்கியின் நீடிப்பு கிளை(Extension Counter) துவங்கப்பட்டது.

1992ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டெல்கோ நிறுவனத்தின் ஒட்டுநர் பயிற்சி பள்ளி நாமக்கல்-சேலம் சாலையில் துவங்கப்பட்டது.

1992ம் ஆண்டு நாமக்கல் நகரில் டெல்கோ நிறுவன உதிரிபாக கிடங்கும், வி.எஸ்.டி. நிறுவனத்தின் பணிமனையும் துவங்கப்பட்டது.

03-02-1993ம் தேதி TVS நிறுவனத்தின் கிளை அலுவலகத்தையும், பணிமனையும் நாமக்கல் அருகே வள்ளிபுரத்தில் துவங்கப்பட்டது.

1993ம் ஆண்டு அரசு கண் பார்வையற்றோர் மற்றும் காது கேளாதவர் பள்ளி மாணவர்கள் நல நிதிக்காக ரூ.5000/- நன்கொடை வழங்கப்பட்டது.

1993ம் ஆண்டு நாமக்கல் பலப்பட்டறை அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலுக்கு உற்சவ வாகனம்(சப்பரம்) செய்து தரப்பட்டது.

1993ம் ஆண்டு அகில இந்திய வேலைநிறுத்தத்தின் போது துப்பாக்கி சூட்டில் பலியான உரிமையாளர் வேலுமணியின் குடும்பத்திற்கு ரூ.25,000/- நிதி வழங்கப்பட்டது.

29-07-1995 அன்று ஸ்ரீ ஆஞ்சநேயர் சுவாமி கோவில் கட்டிட திருப்பணிக்கு நமது சங்கத்தின் சார்பில் நன்கொடை ரூ. 50,000/- வழங்கப்பட்டது.

1995ம் ஆண்டு Ashok Leyland நிறுவனத்தின் ஓட்டுனர் பயிற்சி மையம் நாமக்கல் அருகே வள்ளிபுரத்தில் துவங்கப்பட்டது.

28-06-1995ம் முதல் சங்கத்தில் பணிபுரிகின்ற ஊழியர்கள் அனைவருக்கும் விபத்து பாதுகாப்பு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுவருகின்றது.

1996ம் ஆண்டு கோட்டை தேர் மேடையினை சங்கத்தின் மூலம் புதியதாக ரூ.1,06,000/- செலவில் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது.

1996ம் ஆண்டு செங்கழநீர் பிள்ளையார் கோவில் திருப்பணிக்கு ரூ. 25,000/- வழங்கப்பட்டது.

1997ம் ஆண்டு தமிழகத்தின் இயற்கை சீற்றத்தின் காரணமாய் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரண நிதி ரூ. 50,000/- வழங்கப்பட்டது.

01-02-1997ம் முதல் சம்மேளனம் அறிவித்த வாடகையினை நமது சங்கத்தின் மூலம் லாரிகளை வரிசை முறையில் நிறுத்தி நியாயமான வாடகை பெற்று தரப்பட்டது.

01-09-1997ம் முதல் உறுப்பினர்கள் அனைவருக்கும் ரூ. 1 இலட்சத்திற்கு இன்சூரன்ஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.

1997ம் ஆண்டு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வாயிலாக IOC யின் மொத்த ஆயில் விற்பனை கிடங்கு வசதி ஏற்படுத்தப்பட்டு, ஆயில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3.50 விலை குறைவாக கிடைக்கின்றது.

1997ம் ஆண்டு வெளி மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களை அரசு அதிகாரிகள் சோதனை என்ற பெயரில் ஒரிஜினல் ஆவணங்களை பறிமுதல் செய்வதை உயர்நீதி மன்றத்தில் தடை உத்தரவு பெற்று தடுக்கப்பட்டது.

1997ம் ஆண்டு நாமக்கல் நகரை அழகுப்படுத்தும் பொருட்டு சங்கம் முன்னின்று டிராபிக் சிக்னல் மற்றும் சாலை பிரிப்பு தட்டிகள் அமைக்கப்பட்டது.

1997ம் ஆண்டு வெளி மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட பத்து சக்கர வாகனங்களை தமிழகத்தில் மறுபதிவுக்கு வரும் போது மொத்த எடையை குறைத்து மறுபதிவு செய்ததை ஆட்சேபித்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தடை உத்தரவு பெற்று அவ்வாகனங்களுக்கு 25000 கிலோ எடை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நிலம்

05-11-1973 பரமத்தி ரோட்டில், பெட்ரோல் பங்க் நிலம் 1 ஏக்கர் வாங்கப்பட்டது.

09-05-1991 பாப்பிநாய்க்கன்பட்டி, முதலைப்பட்டியில் 96.50 சென்ட் நிலம் வாங்கப்பட்டது. நான்கு வழி சாலை விரிவாக்கத்திற்கு பின் தற்பொழுது 28380 சதுர அடி நிலம் உள்ளது

05-10-1998 ராசாம்பாளைம் கீரம்பூரில், 3.62 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. நான்கு வழி சாலை விரிவாக்கத்திற்கு பின் தற்பொழுது 3.03 ஏக்கர் நிலம் உள்ளது.

14.-08-2000 ராசாம்பாளையத்தில் 1.17 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. நான்கு வழி சாலை விரிவாக்கத்திற்கு பின் தற்பொழுது 90 சென்ட் நிலம் உள்ளது.

22-10-2001 பரமத்தி ரோடு காவேட்டிப்பட்டியில், 22583 சதுர அடி நிலம் வாங்கப்பட்டது.

16-03-2005 மூங்கில்பட்டியில் 5.38 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது

03-03-2008ஆட்டோ நகரில் 9670 சதுர அடி நிலம் வாங்கப்பட்டது