Our History.

1970-ம் ஆண்டு திரு.ற்.காளியண்ணன் அவர்களுடைய KLP 4710 எண்ணுள்ள லாரியை ஓட்டுநர் திருச்செங்கோட்டில் இருந்து நாமக்கல்லுக்கு காலியாக ஓட்டி வந்து கொண்டிருந்தபோது மாணிக்கம்பாளையம் அருகில் லாரிக்கு பின்னால் வந்து கொண்டிருந்த வேலகவுண்டம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் முந்தி செல்ல வழி கேட்ட போது தாமதமாக வழி கொடுத்த்தின் காரணமாக வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் ஓட்டுநரையும், லாரியையும் சிறைபிடித்து வைத்துவிட்டார்கள்.

இதை கேள்விப்பட்ட லாரி உரிமையாளர் திரு.ஆர்.காளியண்ணன் அவர்களும், அவரோடு என்.கருப்பையா (என்.கே.லாரி சர்வீஸ்) அவர்களும், திரு.கே.ராமசாமி (ஆர். கோபால் லாரி சர்வீஸ்) அவர்களும், திரு.சி.ரங்கசாமி (என்.எஸ்.ஆர்) அவர்களும், திரு.பி.செங்கோடன் (பி.எஸ்.எ டிரான்ஸ்போர்ட்) அவர்களும், திரு.ஆர்.பெரியசாமி (கே.பி.ஆர் & கோ) அவர்களும் வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்திற்கு சென்று லாரியையும், ஓட்டுநரையும் விடுவிக்கச் சொல்லி கேட்டுக் கொண்டபோது விட மறுத்த்தோடு இல்லாமல் மரியாதைக் குறைவோடு உதவி ஆய்வாளர் அவர்கள் பேசியதால் இனி இவரிடம் பேசிப் பயனில்லை என தெரிந்து மேல் அதிகாரிகளுக்கு புகார் செய்யலாம் என முடிவு செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம் என்ற பெயரில் தந்தி அனுப்பப்பட்டது. அதன் பின்னர் சேலம் காவல் கண்காணிப்பாளர் நாமக்கல் வந்து பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தார்.

சங்கம் என்ற நான்கு எழுத்தின் சக்தி மற்றும் பாதுகாப்பை மனதில் கொண்டு உடனடியாக நாமக்கல்லில் சங்கம் துவக்க வேண்டும் என்று அருள் மிகு ஸ்ரீ நாமகிரி அம்மன் கோவிலில் 26-04-1970 ம் ஆண்டு ராஜகோபால் லாரி உரிமையாளர் திரு.சி.நல்லுசாமி அவர்கள் தலைமையில் கூடி திரு.நடேசன் கவுண்டர் தற்காலிக தலைவராக நியமிக்கப்பட்டு 19-06-1970ல் முறையாக பதிவு செய்யப்பட்டது.

19-06-1970-ல் தேதியில் நாமக்கல் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம் என்று முறையாக பதிவு செய்யப்பட்டு அந்த கூட்டத்தில் சங்கத்தின் தலைவராக திரு.குப்புசாமி அவர்களைக் கொண்டு சங்கம் முறையாக செயல்பட துவங்கியது.

1970-ல் முறைப்படி துவங்கப்பட்ட இச் சங்கத்தின் முதல் பொருப்பாளர்களாக

திரு.குப்புசாமி (ஹோம் லேண்ட்) அவர்கள் தலைவராகவும் திரு.கே.ராமசாமி (ஆர். கோபால் லாரி சர்வீஸ்) துணைத் தலைவராகவும் , திரு.சி.ரங்கசாமி (என்.எஸ்.ஆர்) செயலாளராகவும், திரு.பி.சங்கரன் (கே.பி.சன்ஸ்) இணைச் செயலாளராகவும், திரு.சி.நல்லுசாமி (ராஜகோபால்) பொருளாளராகவும் செயல்பட்டனர்.

சங்க செயற்குழு உறுப்பினர்கள்

திரு.பி.செங்கோடன் (பி.எஸ்.எ டிரான்ஸ்போர்ட்)

திரு.குப்புசாமி (எம்.ஆர்.எஸ்)

திரு.வீரப்பக்கவுண்டர்(தென்னரசு)

திரு.வி.நாச்சிக்கவுண்டர்(பழனியாண்டவர்)

திரு.செல்லப்பன் (செந்தில் குமரன்)

திரு.ரங்கசாமி (தென்னரசு)

திரு.வி.கே.ராமநாதன் (ரவி ரோட்வேஸ்)

திரு.காளியப்பன் (கணேசா டிரான்ஸ்போர்ட்)

திரு.எம்.கே.வெங்கடாசலம் (ஆண்டவர் & கோ)

திரு.சந்திரசேகரன் (பழனியாண்டவர் & கோ)

திரு.வி.கருப்பையா (கே.ஜி.ஆர்)

சங்க செயற்குழு உறுப்பினர்கள்

திரு.வி.கருப்பண்ணன் (ஜெயமுருகன்)

திரு.வி.கே. ராமசாமி (வி.பி.ஆர்)

திரு.ஆர்.பெரியசாமி (கே.பி.ஆர்)

திரு.எஸ்.செல்லப்பன் (குலோத்துங்கன்)

திரு.பி.கே.செங்கோடன் (பி.எஸ்.கே)

திரு.வி.கிருஷ்ணசாமி (பி.என்.வி)

திரு.முத்து (ஜெயவிலாஸ்)

திரு.எம்.ஆறுமுகம் (பழனிமுருகன்)

திரு.எ.பி.சின்னுசாமி (எ.பி.சி & சன்ஸ்)

திரு.எம்.நடராஜன் (என்.எஸ்.ஐ.டி)

திரு.பி.கமால் பாட்ஷா (பர்கத் & கோ)